சேமியா தம் பிரியாணி

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 100 கிராம்கேரட்
  2. 100 கிராம்பீன்ஸ்
  3. 100 கிராம்உருளைக்கிழங்கு
  4. 100 கிராம்பச்சை பட்டாணி
  5. 100 கிராம்குடைமிளகாய்
  6. 3பெரிய வெங்காயம் -
  7. 3தக்காளி பெரியது
  8. 2பச்சை மிளகாய்
  9. ஒரு டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -
  10. ஒரு டேபிள் ஸ்பூன்கரம் மசாலா -
  11. 11/2 டீஸ்பூன்மிளகாய்தூள் -
  12. 3 டேபிள்ஸ்பூன்நெய் -
  13. அரை கப்தயிர் -
  14. ஒரு கைப்பிடிபுதினா, கொத்தமல்லி -

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய்,பச்சை பட்டாணி, வெங்காயம் தக்காளி அனைத்தையும் தேவையான வடிவில் நறுக்கி வைக்கவும்

  2. 2

    தக்காளியை அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒன்னரை பாக்கெட் சேமியாவை தண்ணீரில் 3 நிமிடம் ஊற வைக்கவும்

  4. 4

    பின்பு தண்ணீரை வடித்து வைக்கவும்

  5. 5

    ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, பச்சை மிளகாய் வெங்காயம்,சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்க்கவும்

  6. 6

    அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்

  7. 7

    தக்காளி பச்சை வாசனை நீங்கி நன்கு வதங்கிய பின் அதனுடன் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின் அரை கப் தயிர் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  8. 8

    ஒரு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக விடவும்.

  9. 9

    காய்கறிகள் வெந்தவுடன் அதனை பாதியாக பிரித்து ஒரு தட்டில் எடுக்கவும். அதன் பின் ஊற வைத்துள்ள சேமியாவை பாதி அளவு குக்கரில் பரப்பவும். அதன் மேல் தட்டில் வைத்துள்ள காய்கறிகளை பரப்பவும். பின்னர் சேமியாவை பரப்பவும். இறுதியாக கொத்தமல்லி புதினாவை பரப்பி ரெண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

  10. 10

    குக்கரில் வாஷர் இட்டு, விசில் போடாமல் மூடவும். அடுப்பை 7 நிமிடம் சிம்மில் வைக்கவும். பின்னர் குக்கர் மூடியைத் திறந்ததும் சேமியா தம் பிரியாணி தயார். சிறிதளவு கலந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
அருமை சகோதரி நானும் செய்து பார்க்கிறேன். 👌

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes