கறிவேப்பிலைக் குழம்பு

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

கறிவேப்பிலைக் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 கப் கருவேப்பிலை
  2. 1முழு பூண்டு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1/4மூடி தேங்காய்
  6. தேவையானஅளவு குழம்பு மசாலா தூள்
  7. 5 சுண்டவத்தல்
  8. தேவைக்குபுளிக்கரைசல்
  9. தாளிக்க:
  10. கடுகு
  11. கறிவேப்பிலை
  12. உளுந்து
  13. 1/2ஸ்பூன் சீரகம்
  14. 1/4ஸ்பூன் வெந்தயம்
  15. தேவையானஅளவு நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கறிவேப்பிலையை கழுவி தண்ணீர் வடிய காய வைக்கவும்.

    தக்காளியை அரைத்து விழுதாக்கவும்.

  2. 2

    கடாயில், 1ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டவத்தல் வதக்கி, பின் கருவேப்பிலையை வதக்கி தனியாக வைக்கவும்.

  3. 3

    வதக்கிய கறிவேப்பிலையுடன் சுண்டவத்தல்,தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  4. 4

    கடாயில், தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இப்பொழுது புளிக் கரைசல் சேர்க்கவும்.

  6. 6

    புளிக்கரைசல் கொதித்து,பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    அடுப்பை மீடியம் தீயில் வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வரும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கவும்.

  8. 8

    சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.

    இது சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes