சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2டேபிள் ஸ்பூன் நெல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் 2டீஸ்பூன் கடலை பருப்பு,1ஸ்பூன் உளுந்து,31/2ஸ்பூன் மிளகு,,4காய்ந்த மிளகாய், 1ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு கலர் மாறும் வரை வறுக்கவும். பின்னர் கருவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அனைத்து ஆற விடவும்.
- 2
வறுத்த பருப்பு கருவேப்பிலை உடன் 2ஸ்பூன் சீரகம் பச்சையாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் 5டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 1ஸ்பூன் கடுகு, உளுந்து, பெருங்காய தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் 1கப் பூண்டு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் அதனுடன் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி 10நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுது சேர்த்து குழம்பு திக்காக மாறி எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 4
குழம்பு தாயரானதும் அடுப்பை அனைத்து குழம்பின் மேல் 1ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும். சுவையான கருவேப்பிலை பூண்டு குழம்பு தயார். பயணத்தின் போது எடுத்து செல்லலாம் கெட்டு போகாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு பேலஸ் ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு
#book #lockdownசெட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை. அதேபோல் இந்த கருவேப்பிலை பூண்டு குழம்பு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கருவேப்பிலையில் இரும்பு சத்தும் , பூண்டில் இரத்தம் சுத்தப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. இயற்கையாவே நம் தமிழ் உணவில் பூண்டும் கருவேப்பிலையும் தினமும் சேர்த்து கொள்வது வழக்கம். சூடான இட்லி தோசை என அனைத்திற்கும் பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
-
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
-
-
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்