மட்டன் சுத்ரியான்

#keerskitchen
இஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது.
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மற்றும் நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு ஒரு வேளை தண்ணீர் அதிகமாக தெரிந்தால் ஒரு துண்டில் வைத்து இந்த மாவை மூடி வைக்கவும் பத்து நிமிடத்தில் தண்ணீரை உறிஞ்சிய துண்டை எடுத்து விடவும். கொழுக்கட்டை பதத்திற்கு நமக்கு மாவு தேவை.
- 2
ஒரு பெரிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
எலும்புடன் கூடிய ஆட்டுக் கறியை கழுவி சுத்தம் செய்து இந்த மசாலாவில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் கறியை வதக்கியபின் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்துவிட்டு, ஆட்டுக்கறி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 4
கறி வெந்த பின் குக்கரை திறந்து இதை அடுப்பில் வைத்து ஆன் செய்யவும். புளியை ஊற வைத்து புளிக்கரைசலை இதில் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் தக்காளியை அரைத்து விழுதாக இதில் சேர்க்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தீயை மிதமாக்கி இவற்றை கொதிக்க விடவும்.
- 5
இப்பொழுது மாவை எடுத்து சிறு உருண்டைகளாகப் பிடித்து படத்தில் காட்டியுள்ளபடி வடிவமைத்து ஒரு தட்டில் வைக்கவும். எடுத்துள்ள மாவு முழுதையும் இதே போல் செய்து கொள்ளவும். விருப்பப்பட்டால் வேறு வடிவிலும் செய்யலாம். கொதிக்கும் மசாலா கலவையில் தயாரித்துள்ள இந்த வடிவங்களை சேர்த்து தீயை குறைத்துக் கொள்ளவும். குறிப்பாக எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மசாலா கலவையில் சேர்க்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அடுத்த பகுதியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு சமைக்கவும்.
- 6
இவ்வாறு செய்வதனால் மாவு வடிவங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் குலையாமல் கரைந்து போகாமல் இருக்கும். கடைசியில் இருக்கும் மாவு வடிவங்களை சேர்த்தபின் ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கிய பின் திறக்கவும் சுவையான சுத்ரியான் தயார்.
- 7
இது மசாலாவில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த உணவு செமி லிக்விட் மசாலாவாக இருக்கும். இதை காலை அல்லது இரவு நேர உணவாக செய்யலாம். நாங்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி இருக்கும் விசேஷ நாட்களில் கண்டிப்பாக இதை செய்வோம். ஒன்றுகூடி சாப்பிடும்போது சுவையும் கூடுதலாக இருக்கும். மசாலாக்கள் உடன் கொஞ்சம் புளிப்பும் சேர்ந்து அட்டகாசமாக இருக்கும்.
- 8
குறிப்பு:
1. புளிப்பு சுவை விரும்பாதோர் புளியை தவிர்த்து விடலாம்.
2. அதிகமாக இதை கிளறாமல் சிறு தீயில் வைத்து தம் செய்வது போல சமைக்கவும்.
3. ஆட்டுக்கறிக்கு பதிலாக கோழிக்கறி தலைக்கறி ஆட்டுக்கால் இவற்றை சேர்த்தும் செய்யலாம் சுவையாக இருக்கும்.
4. மாமிசத்தின் அளவை விருப்பப்படி குறைவாகவோ கூடுதலாகவோ சேர்த்தும் சமைக்கலாம்.
5. ரேஷன் புழுங்கல் அரிசி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா


மட்டன் குருமா (MUtton kuruma recipe in tamil)


காய்கறி மசாலா புலாவ்


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


தக்காளி பாத்


குஸ்கா


சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)


மட்டன் சுக்கா பிரியாணி


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)


புளிசாதம் (Tamarind rice)


மட்டன் சுக்கா(mutton chukka recipe in tamil)


வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)


மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)


குக்கர் சிக்கன் பிரியாணி


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)


மட்டன் பிரியாணி


சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி


சிம்பிள் தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)


பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)


ஆட்டுக்குடல் குழம்பு


கொண்டக்கடலை சாட்(chana chaat recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)


பாஸ்மதி வெஜ் பிரியாணி


ஹைதராபாதி ஹலீம் (Hyderabadi haleem recipe in tamil)


சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)


குடைமிளகாய் பிரியாணி (Kudaimilakaai biryaani Recipe in Tamil)

கமெண்ட்