பேக்டு சமோசா

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#kayalscookbook இது எண்ணெயில் பொரிக்காமல் ஓவனில் செய்த சமோசா..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2 1/2கப் மைதா
  2. 1/2கப் எண்ணெய்
  3. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. தேவையான அளவு உப்பு
  5. 4வேக வைத்த உருளைக்கிழங்கு
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1ஸ்பூன் மல்லித் தூள்
  8. 1ஸ்பூன் சீரகத்தூள்
  9. 1ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  10. சிறிதளவுகொத்தமல்லி இலை
  11. 1/2ஸ்பூன் சோம்பு
  12. 1 வெங்காயம்
  13. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், எண்ணெய் அதோடு தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்..

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்.. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்... அதோட இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்..

  3. 3

    எல்லாம் வதங்கியதும் அதனோடு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்... அதோடு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.. இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..

  4. 4

    மாவிலிருந்து சிறு உருண்டையை எடுத்து நீளவாக்கில் நன்றாக தேய்க்கவும்.. அதை பாதியாக வெட்டவும்... அதைக் கோன் மாதிரி மடித்து உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடவும்..

  5. 5

    ஓவனை ப்ரீ ஹிட் செய்து 200° செல்சியஸில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்..

  6. 6

    இப்போது சுவையான பேக்டு சமோசா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes