துவரம் பருப்பு சாம்பார்

சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.
- 2
குக்கரில் கழுவிய துவரம்பருப்பு,சின்ன வெங்காயம்,பூண்டு, மிளகாய்,கத்தரிக்காய், தக்காளி இவற்றை நறுக்கி சேர்க்கவும்.
- 3
இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து,இவை எல்லாம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 6 விசில் விடவும்.
- 4
பருப்பு வெந்ததும், தண்ணீரை தனியாக பிரித்து விட்டு பருப்பு மற்றும் காய்கறி கலவையை நன்றாக நன்றாகக் கடையவும்.
இப்படி கடைந்தால், எல்லோரையும் காய்கறி சாப்பிட வைத்தது போலாகும்.
- 5
இதனுடன் வேகவைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
- 6
நன்றாக கொதித்ததும், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். சாம்பார் பொடி பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
- 7
பின்னர் தேங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு பல்ஸ் ஓட்டி சாம்பாரில் சேர்க்கவும்.
- 8
மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும். தேங்காய் போட்டதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாகும். அதனால் தேவை எனில் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
- 9
கடைசியாக புளிக்கரைசலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 10
மேலும்,ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம்,வர மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான சாம்பார் ரெடி.
இது சாதம் மட்டுமில்லாமல் இரவு நேரத்தில் இட்லி,தோசை சாப்பிடுவதற்கு கூட காம்பினேஷன் ஆக இருக்கும்.
- 12
குறிப்பு:
காய்கறிகள் சாப்பிட விரும்புபவர்கள், ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு மூடி வைத்து,அதை குக்கரில் வைத்து,பருப்புடன் சேர்த்து வேக விட்டால் காய்கறிகள் தனியாக வெந்துவிடும். அதை குழம்பில் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏 Kalavathi Jayabal -
-
-
-
-
-
-
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
-
-
-
More Recipes
கமெண்ட்