சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் (100 கிராம் அளவு) துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து குக்கரில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு கப் அளவிற்கு சுரைக்காயை துண்டுகளாக அரிந்து கொள்ளவும். தக்காளி ஒன்று, பத்து சிறிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு,,அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய்,அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் பொடியாக அறிந்த சுரைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
காய்கறியுடன் 3 ஸ்பூன் சாம்பார் தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.வேகவைத்த பருப்பை வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். புளியை கரைத்து குழம்பில் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் தேவை என்றால் தேங்காய்ப்பூ சேர்த்து கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். சுரைக்காய் பருப்பு சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
-
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம் Lakshmi Bala -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)