வாழைக்காய் பருப்பு உசிலி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#banana
சாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

வாழைக்காய் பருப்பு உசிலி

#banana
சாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
8பேர்
  1. 8வேகவைத்த வாழைக்காய் துண்டுகள்
  2. 1/2கப்க.பருப்பு
  3. 1/4கப்து.பருப்பு
  4. 1டேபிள்ஸ்பூன்உ.பருப்பு
  5. 10சி.மிளகாய்
  6. 2ப.மிளகாய்
  7. 1 டீஸ்பூன்கடுகு
  8. 3/4டீஸ்பூன்ம.தூள்
  9. 2ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  10. தேவையான அளவுகல்லுப்பு ருசிக்கு
  11. 4டேபிள்ஸ்பூன்தே.எண்ணெய்
  12. 1ஆர்க்குகறிவேப்பிலை
  13. 1சிட்டிகைபெருங்காயம்
  14. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    வாழைக்காயை இரண்டாக வெட்டி,ம.தூள்,உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைக்காமல் பாத்திரத்தில் போடவும்.

  2. 2

    பிறகு மூடி போட்டு குழையாமல் வேகவிடவும். வெந்ததை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.ஆறினதை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்

  3. 3

    க.பருப்பு,து.பருப்பு,உ.பருப்பு,சி.மிளகாய்,ப.மிளகாயை,சுடு தண்ணீரில்1/4மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் உப்பு,கறிவேப்பிலை போட்டு கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடாயில் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகை போடவும்.கடுகு வெடித்ததும் அரைத்த விழுதை போட்டு உதிரியாகும் வரை நன்கு வதக்கி தட்டில் ஆறவிடவும்.

  5. 5

    கடாயில் தே.எண்ணெய்விட்டு காய்ந்ததும்,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு பொறிந்ததும்,ம.தூள்,காஷ்மீரி மிளகாய்தூள்,கறிவேப்பிலை போடவும்.பிறகு உதிர்த்த வாழைக்காய்,உப்பு, பெருங்காயத்தூள்,வதக்கி வறுத்தபொடியை போடவும்.

  6. 6

    பிறகு மூடி போட்டு 5நிமிடம் வேகவிடவும். மூடியை எடுத்துவிட்டு ஒன்று சேர கலந்து மேலும்5நிமிடம் வெந்ததும் இறக்கி விடவும்.

  7. 7

    மிகமிக வித்தியாசமான,"வாழைக்காய் பருப்பு உசிலி",தயார்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் ருசி. செய்து பார்த்து ருசித்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes