இட்லி பொடி receip in tamil

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#friendshipday
@homecookie_270790

'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)

வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.

நன்றி தோழி.

நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி

இட்லி பொடி receip in tamil

#friendshipday
@homecookie_270790

'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)

வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.

நன்றி தோழி.

நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1/4கப் கடலைப்பருப்பு
  2. 1/4கப் பொட்டுக்கடலை
  3. 1/4கப் உளுத்தம் பருப்பு
  4. 6வரமிளகாய்
  5. 5பூண்டு பல்
  6. 1/2ஸ்பூன் சீரகம்
  7. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. 1ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு, இவற்றை தனித்தனியே வெறும் வாணலியில், சிவக்க வறுக்க வேண்டும்.

  2. 2

    ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்(மணமாக இருக்க) விட்டு வர மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை,சீரகம், இவற்றை தனித்தனியே வறுக்க வேண்டும்.

  3. 3

    கடைசியாக வறுத்து அடுப்பை அணைக்கும் பொழுது, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி வறுத்த அனைத்தையும் ஆறவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.அரைக்கும் பொழுது உப்பு சேர்க்கவும்.

  4. 4

    அவ்வளவுதான். சுவையான இட்லி பொடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

கமெண்ட் (2)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
Hey... Wowwwwwww... So happiee Sister... Thanks alot for ur wishes and appreciation.. try ... Everything it means alot to me... 🤗🤗🤗🤗😍😍😍🤝🤩🤩🤩🤩

Similar Recipes