தேவையான பொருட்கள்

10 நிமிடம்
நான்கு பேர்
  1. 25 சிறிய வெங்காயம்
  2. 10 பூண்டு பற்கள்
  3. 2 தக்காளி
  4. 10 வத்தல் மிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. ஒரு டீஸ்பூன் கடுகு
  8. ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. கால் டீஸ்பூன் பெருங்காய தூள்
  10. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு இவைகளை உரித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வற்றல் மிளகாயை ஒரு பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இது ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, வற்றல் மிளகாய், உப்பு போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது தக்காளியை நான்காக நறுக்கி சேர்த்து அரைக்கவும்.

  5. 5

    அடுத்து ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

  6. 6

    நன்கு கலக்கி விடவும். இப்பொழுது அந்த பச்சை வாசனை போக நன்றாக இருக்கும்.

  7. 7

    இது இட்லி தோசைக்கு நல்ல சைட் டிஷ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes