எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோசிக்கன்
  2. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 2 ஸ்பூன்மல்லி தூள்
  4. 1/2டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. 2பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை பூ அனைத்தும்
  6. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  7. 2 டீஸ்பூன்மிளகு தூள் சீரகத்தூள் சோம்பு தூள் அனைத்து
  8. 5முந்திரி
  9. ஒரு சிறிய கப்தேங்காய் துருவல்
  10. 7 சிறியவெங்காயம் , பெல்லாரி 1
  11. 2தக்காளி
  12. 2பச்சை மிளகாய்
  13. கை அளவுபுதினா கொத்தமல்லி , கருவேப்பிலை சிறிது
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவுநெய் தாளிக்க
  16. அரை மூடிஎலுமிச்சை
  17. 1 கப்இஞ்சி பூண்டு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு அவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு தேங்காய் பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் முந்திரியை அரைத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு வாசனை பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு வெங்காயம் நன்கு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு பச்சை மிளகாய் தக்காளி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து கொஞ்சம் தயிர் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும் குக்கரில் 5 விசில் 5 நிமிடம் போதுமானது பிறகு இறக்கி வைத்து விடவும்.இதனை சாதம் சப்பாத்தி பரோட்டா இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes