தேவையான பொருட்கள்

45  minutes
4 பரிமாறுவது
  1. பட்டை கிராம்பு
  2. ஒரு ஸ்பூன்சோம்பு
  3. ஒரு ஸ்பூன்சீரகம்
  4. 25சின்ன வெங்காயம்
  5. 4வர மிளகாய்
  6. 4 ஸ்பூன்தேங்காய் துருவல்
  7. கருவேப்பிலை
  8. 2பெரிய வெங்காயம்
  9. 3தக்காளி
  10. இஞ்சிபூண்டு பேஸ்ட்
  11. பத்து பல்பூண்டு
  12. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  13. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  14. 2 ஸ்பூன்கொத்தமல்லி
  15. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45  minutes
  1. 1

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம் பட்டை கிராம்பு சோம்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கி பின் அதனுடன் சின்னவெங்காயம் பூண்டு பத்து பல் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஆட்டுக்குடல் ஐ சுடு தண்ணீரில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு சீரகம் சிறிது சேர்த்து தாளித்து பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை அரைத்து அதனுடன் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் தூள் குழந்தைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின்பு சுத்தம் செய்த குடலை சேர்த்து வதக்கவும் அதனுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    கால் மணி நேரம் குடலை வதக்கவும்.அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 8 முதல் 10 விசில் விட்டு எடுக்கவும்

  7. 7

    மல்லி இலை தூவி இறக்கவும் குடல் குழம்பு தயார் (குழம்பில் உள்ள குடலை எடுத்து ஆட்டு ரத்த பொரியலில் சேர்த்துக்கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes