எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 150 கிராம் கருப்பு சுண்டல்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 பட்டை
  5. 2 கிராம்பு
  6. 1ஸ்பூன் சோம்பு
  7. 1/2 மூடி தேங்காய்
  8. 3 ஸ்பூன் பொட்டுக்கடலை
  9. 2 பச்சை மிளகாய்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்
  11. 1 ஸ்பூன் தனியா தூள்
  12. தண்ணீர்
  13. தேவையான அளவு உப்பு
  14. 2 ஸ்பூன் எண்ணெய்
  15. 1/2 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கருப்பு சுண்டல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்க்கவும். அடுத்தது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு கருப்பு சுண்டல் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.

  3. 3

    பிறகு சுண்டல் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கலந்துவிடவும். நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
    ((சுவையான கருப்பு சுண்டல் குருமா தயார். இதனை சப்பாத்தி, பூரி மற்றும் தோசை, இட்லி பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes