ஈஸி ஆலூ கிரேவி #magazine3

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 2கப்வேக வைத்த உருளை கிழங்கு
  2. 1கப்நறுக்கின வெங்காயம்
  3. 1டீஸ்பூன்ம.தூள்
  4. 1டேபிள்ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்தூள்
  5. 2ப.மிளகாய்
  6. 1ஆர்க்குகறிவேப்பிலை
  7. ருசிக்குஉப்பு
  8. 2டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  9. 1டீஸ்பூன்கடுகு
  10. 1ஸ்பூன்க.பருப்பு
  11. 1/2ஸ்பூன்உ.பருப்பு
  12. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    உருளை கிழங்கை இரண்டு துண்டுகளாக நறுக்கி,ம.தூள்,உப்பு,தண்ணீர் விட்டு குக்கரில் போடவும்.

  2. 2

    மூடி போட்டு வேக வைக்கவும்.பிறகு ஸ்டீம் போனதும் வெளியே எடுத்து வடி தட்டில் ஆறவிடவும்.

  3. 3

    கடாயில் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு,சிவந்ததும்,ப.மிளகாய் போடவும்.பிறகு நறுக்கின வெங்காயம்,உப்பு,ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  4. 4

    உருளை கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.மசித்த உருளை கிழங்கை வதங்கின வெங்காயத்துடன் சேர்க்கவும்.பிறகு ஒன்று சேர கிளறவும்.

  5. 5

    சிறிது தண்ணீர் தெளித்து கிரேவி பதத்திற்கு வேக விடவும்.ஒன்றுசேர வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இப்போது மிகவும் சுவையான,*ஈஸி ஆலூ கிரேவி*தயார்.இந்த கிரேவி அனைவருக்கும் பிடிக்கும். சப்பாத்தி,பூரிக்கு,ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்த்து அனைவரும் ருசிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes