கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4

குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 1 கப்பொடியாக நறுக்கிய குடமிளகாய்
  2. 2 கப்பாஸ்மதி அரிசி
  3. 1கப்நீளமாக நறுக்கின வெங்காயம்
  4. 1/2 கப்பொடியாக நறுக்கிய தக்காளி
  5. 6கீறின ப.மிளகாய்
  6. சிறிய துண்டுபட்டை
  7. 4கிராம்பு
  8. 2ஏலக்காய்
  9. 1பிரிஞ்சி இலை(பெரியது)
  10. 2 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  11. 1டீ ஸ்பூன்ம.தூள்
  12. 1டீ ஸ்பூன்பெருங்காயம்
  13. 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  14. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  15. 1 ஸ்பூன்நெய்
  16. 2 ஸ்பூன்கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை
  17. ருசிக்குஉப்பு
  18. 4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    பாஸ்மதி அரிசியில் 4 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    கடாயில் நெய்,எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு,ஏலக்காய் போட்டு வறுக்கவும்.

  3. 3

    இஞ்சி,பூண்டு விழுது, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.பிறகு வெங்காயம், உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து தக்காளி,ம.தூள்,காஷ்மீரி மி.தூள்,பெருங்காயத்தூள் போடவும்.

  4. 4

    நன்கு வதக்கவும். வதங்கினதும், நறுக்கின குடமிளகாய்,கறிவேப்பிலை போடவும். ஒன்று சேர அனைத்தையும் வதக்கவும்.தனியாக குக்கரில் ஊறின பாஸ்மதி அரிசியை போட்டு,குக்கரை மூடவும்.

  5. 5

    பிறகு 2விசில் விட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும். சாதத்தில்,உப்பு,நெய்விட்டு ஆற விடவும். வதக்கிய குடமிளகாயில் வடித்த சாதத்தை போடவும்.

  6. 6

    சாதத்தை போட்டதும் ஒன்று சேர கிளறவும்.மேலே கொத்தமல்லி தழை யை போடவும். இப்போது மிகவும் வித்தியாசமான,*கேப்ஸிகம் பிரியாணி* தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes