பாகற்காய் பிட்லை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#nutrition
பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

பாகற்காய் பிட்லை

#nutrition
பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1பாகற்காய்
  2. ஒரு கைப்பிடிவேர்கடலை
  3. 2 டீஸ்பூன்தேங்காய் துருவல்
  4. கால் டீஸ்பூன்மிளகு
  5. 5சிவப்பு மிளகாய்
  6. ஒரு டீஸ்பூன்தனியா
  7. அரை டீஸ்பூன்கடலைபருப்பு
  8. கால் டீஸ்பூன்கடுகு
  9. இரண்டு டீஸ்பூன்கடலை எண்ணெய்
  10. நெல்லிக்காய் அளவுபுளி
  11. தேவைக்கேற்பஉப்பு
  12. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  13. கால் கப்துவரம் பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாகற்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்

  2. 2

    தனியா கடலைபருபுப்பு மிளகாய் மிளகு போன்றவற்றை சிவக்க வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    பாகற்காய் வெந்தவுடன் புளிக்கரைசல் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    அதனுடன் வேகவைத்த வேர்கடலை சேர்த்து கொதிக்க விட்டு வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்

  5. 5

    பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கடுகு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes