மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடங்கள்
  1. 1/2 கப் பச்சை மணத்தக்காளிக் காய்
  2. 1/2கப் சாம்பார் வெங்காயம்
  3. 5பல் பூண்டு
  4. 1தக்காளி
  5. 1டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  8. 1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  9. 1/4கப் புளிக்கரைசல்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 4டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. தாளிக்க:
  13. 1/4டீஸ்பூன் கடுகு
  14. 1/8டீஸ்பூன் வெந்தயம்
  15. 2வற்றல் மிளகாய்
  16. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

35நிமிடங்கள்
  1. 1

    மணத்தக்காளிக்காயை பறித்து நன்கு கழுவி,சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி வைக்கவும்.

  3. 3

    மசாலாப் பொருள்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல்,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  7. 7

    மணத்தக்காளிக்காயை நல்லெண்ணை சேர்த்து வதக்கவும்.

  8. 8

    பின்னர் குழம்பில் சேர்த்து வேக வைக்கவும்.

  9. 9

    தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

  10. 10

    கொதிக்கும் குழம்பில் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  11. 11

    கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

  12. 12

    தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான மணத் தக்காளி குழம்பு தயார்.

  13. 13

    இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இட்லி, தோசை உடன் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes