ரசமலாய்(rasmalai recipe in tamil)

Vanitha Suresh
Vanitha Suresh @vanitha5566

ரசமலாய்(rasmalai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
4 நபர்கள்
  1. 2 லிட்டர் ஃபுல் கிரீம் பால்
  2. 1/2 எலுமிச்சை
  3. 4 கப் சர்க்கரை
  4. சிறிது ஏலக்காய் தூள்
  5. சிறிது குங்குமப்பூ
  6. சிறிது பாதாம் மற்றும் முந்திரி

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு அதில் அரை எலுமிச்சம்பழத்தை பிழியவும். பால் திரிந்த உடன் அடுப்பை அனைத்து விட்டு பச்சைத் தண்ணீரை ஊற்றி நன்றாக அலச வேண்டும்.

  2. 2

    ஒரு துணியில் திரிந்த பாலை வடிகட்டவும் பிறகு நன்றாக அந்தத் துணியை பிழியவும். இப்பொழுது பன்னீராக ஆகிவிடும்.அதை நன்றாக 10 நிமிடம் பிசைந்து அதை உருட்டி தட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் 2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் பிறகு தட்டி வைத்த பன்னீர் பந்துகளை ஜீரா ஓடு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பன்னீர் பந்துகள் ஜீராவில் நன்றாக வெந்து பெரியதாக உப்பி இருக்கும்.

  4. 4

    வெந்த ரசகுல்லா பந்துகளை சிறிது விட்டு தனியாக எடுத்து வைத்து விடவும் இப்பொழுது அடி கனமான பாத்திரத்தில் 1 லிட்டர் கெட்டியான பால் 2 கப் சர்க்கரை சேர்த்து ஒன்றாக அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாக விடவும்.

  5. 5

    இப்பொழுது அதில் தேவையான அளவு ஏலக்காய் தூள் குங்குமப்பூ உடைத்து பொடியாக்கிய பாதாம் முந்திரி ஆகிய கலவைகளை நன்றாக சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    இப்பொழுது ஜீராவில் ஊறவைத்த ரசகுல்லா பந்துகளை கெட்டியான பாலில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊறியவுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vanitha Suresh
Vanitha Suresh @vanitha5566
அன்று

Similar Recipes