பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

பாதுசா(BADUSHA RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பேர்
  1. 250கிராம் மைதாமாவு
  2. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர்
  4. 4டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1/4 கிலோ சர்க்கரை
  6. 3ஸ்பூன் பால்
  7. 1/2லிட்டர் தண்ணீர்
  8. சிறிதளவுகுங்குமப்பூ
  9. சிறிதளவுபாதாம், முந்திரி துருவல் எண்ணெய் பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விட்டு பிறகு கெட்டி தயிர்,நெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக(கெட்டியாக) பிசையவும். அதில் துணி போட்டு மூடி வைத்து 10 அல்லது 15 நிமிடங்கள் காத்திருக்கவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரைப்பாகு ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும். அதில் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்க்கலாம். சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பாதுஷா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் உளுந்தவடை போல அழுத்தி எண்ணெயில் இருபுறமும் பொரித்து எடுக்கவும்

  4. 4

    சர்க்கரை பாகு சூடாக இருக்கும்போது பொரித்த பாதுசாக்களை அதில் மூன்று அல்லது நான்கு நிமிடம் போட்டு ஊறவைத்து உடனே வேறொரு தட்டிற்கு மாற்றவும்

  5. 5

    அதன்மீது பாதாம் முந்திரி பருப்புகளை சேர்த்து அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
அன்று

Similar Recipes