கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Npd1
#கோதுமை
@cook_19751981
இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் வெல்லம்
  3. 1/2 கப் திக்கான தேங்காய் பால்
  4. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  5. 1 சிட்டிகை உப்பு
  6. 1 வாழைப்பழம்
  7. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 2 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் சிறிது கொதிக்க விட்டு திக்கான சிரப் (இளம் பாகு) எடுக்கவும்
    பின் கோதுமை மாவை வெறும் வாணலியில் வாசனை வர வறுத்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஏலத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வெல்லபாகை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்

  2. 2

    பின் இதை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும் பின் எண்ணெய் மற்றும் நெய் கலந்து விடவும் பின் மாவை முக்கால் குழிக்கு ஊற்றவும் மெல்லிய தீயில் வேக விடவும் பின் மெதுவாக திருப்பி விடவும்

  3. 3

    சுற்றிலும் மீண்டும் சிறிது எண்ணெய் நெய் கலந்து விடவும் பின் பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes