பாவ் (pav recipes in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#npd2 இது வடமாநில கடைகளில் எளிதாக கிடைக்கும்.. மற்ற இடங்களில் கிடைக்காது... இதை வீட்டிலேயே நாமும் செய்து சுவைக்கலாம்...

பாவ் (pav recipes in tamil)

#npd2 இது வடமாநில கடைகளில் எளிதாக கிடைக்கும்.. மற்ற இடங்களில் கிடைக்காது... இதை வீட்டிலேயே நாமும் செய்து சுவைக்கலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3கப் மைதா
  2. 3ஸ்பூன் சர்க்கரை
  3. 1ஸ்பூன் ஈஸ்ட்
  4. 1கப் பால்
  5. 3டேபிள் ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும்.. அதில் சிறிதளவு சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்தால் பொங்கி இருக்கும்..

  2. 2

    அந்தப் பாலை மைதா மாவில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்... கையில் ஒட்டுவது போலத்தான் இருக்கும்... அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்..

  3. 3

    பிசைந்த மாவின் மேல் மீண்டும் வெண்ணை தடவி மூடி மாவை இரண்டு மடங்காக பொங்கி வரும் வரை வைக்கவும்..

  4. 4

    மாவு நன்றாக பொங்கி வந்ததும் மீண்டும் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெண்ணெய் தடவிய டிரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.. 30 நிமிடங்கள் மூடி வைத்தால் உருண்டை இரண்டு மடங்காக பொங்கி இருக்கும்..

  5. 5

    ஓவனை 170 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் பிரிஹீட் பண்ணவும்.. ரெடியான பண்ணின் மேல் சிறிது பால் தடவி ஓவனில் வைக்கவும்... 170 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்..

  6. 6

    பன் சூடாக இருக்கும்போதே அதன் மேல் வெண்ணெயை தடவவும்... அதன்மேல் ஈரத் துணியைப் போட்டு மூடி ஆறவிடவும்... ஆறியதும் சாப்பிட அருமையாக இருக்கும்...

  7. 7

    இப்போது சுவையான வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பாவ் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes