உலர்ந்த தேங்காய் பிஸ்கட்(Dry coconut biscuit recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

உலர்ந்த தேங்காய் பிஸ்கட்(Dry coconut biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒரு கப் மைதா மாவு
  2. அரை கப் வெண்ணெய்
  3. அரை கப் பொடித்த சர்க்கரை
  4. அரைக் கப் உலர்ந்த தேங்காய்த்துருவல்
  5. அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. ஒரு பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை ஒரு சிறிய மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேசினில் வெண்ணை மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக சேவிங் கிரீம் மாதிரி பத்து நிமிடம் கலக்கி குழைத்துக்கொள்ளவும்.

  3. 3

    மைதா மாவு பேக்கிங் பவுடர் இவற்றை சலித்து வைத்துக் கொள்ளவும்.மைதா மாவை தோல்வி பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்.இப்பொழுது வந்த தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    சப்பாத்தி மாவு பதத்திற்கு உருட்டிக் கொள்ளவும். இப்பொழுது அதை சிறிய உருண்டைகளாக உருட்டி இரண்டு கைகளிலும் உள்ளங்கையில் வைத்து லேசாக அமுக்கி வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது வெண்ணெய் தடவிய ஒரு ட்ரேயில் வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கி வைத்து ஒரு போர்க்கின் உதவியுடன் குத்தி விடவும்.

  6. 6

    அதை 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் பேக் செய்யவும். கரகரப்பான சுவையான உலர்ந்த தேங்காய் பிஸ்கட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes