நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக......

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1/4 கி சீரக சம்பா அரிசி
  2. 1 கிண்ணம் நெய்
  3. தாளிக்க....பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, அன்னாசிப்பூ
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 3 பச்சை மிளகாய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 10 முந்திரி பருப்பு உலர் திராட்சை
  9. 1/4 கி சிக்கன்
  10. 1 பெரிய வெங்காயம்
  11. 1 தக்காளி
  12. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1 ஸ்பூன் கரம் மசாலா
  14. 1 ஸ்பூன் மிளகாய் பொடி
  15. 1 ஸ்பூன் மல்லிப்பொடி
  16. 2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  17. 6 துண்டு தேங்காய்
  18. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயை எடுத்து 6 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.. பிறகு முந்திரி, உலர் திராட்சை மற்றும் வெங்காயத்தை வறுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

  2. 2

    பிறகு அதே நெய்யில் பட்டை, சோம்பு, அன்னாசி பூ, கிராம்பு, பிரியாணி இலைகள், ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய இஞ்சி, மற்றும் சீரக சம்பாஅரிசியை சேர்க்கவும். உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு வெந்தபிறகு நெய் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

  5. 5

    சூடாக மரிமாறவும்.சுவையான நெய் சாதம் தயார்.

  6. 6

    கால் கிலோ சிக்கனை எடுத்து சுத்தம் செய்யவும். ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும். பிறகு பட்டை, சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்க்கவும்.

  7. 7

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின்னர் சிக்கன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

  8. 8

    தேங்காய் துண்டுகளை சிக்கன் மசாலாவுடன் அரைத்து கலவையுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

  9. 9

    பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவி நெய் சாதத்துடன் பரிமாறவும்.

  10. 10

    தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். குழந்நைகளுக்கு பிடித்த உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes