ரவா வேர்க்கடலை கிச்சிடி (Rava Groundnuts kichidi recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1&1/2கப் வெள்ளை ரவை
  2. 1/4கப் வேர்க்கடலை
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 3பச்சை மிளகாய்
  6. 1/4கப் பீன்ஸ் நருக்கியது
  7. 1/4கப் கேரட் நருக்கியது
  8. 1/4கப் பச்சை பட்டாணி
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. தாளிக்க:
  12. 3டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 1/4டீஸ்பூன் கடுகு
  14. 1/2டீஸ்பூன் உளுந்து பருப்பு
  15. 1/2டீஸ்பூன் கடலை பருப்புகறிவேப்பிலை
  16. கறிவேப்பிலை
  17. மல்லி இலை
  18. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ரவையை நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    காய்கறிகளை நறுக்கி தயாராக வைக்கவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    அதன் பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    எல்லாம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துளள பீன்ஸ்,கேரட் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி சேர்க்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  7. 7

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,உப்பு கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  8. 8

    காய்கள் வெந்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் சேராமல் நன்கு கலந்து விடவும்.

  9. 9

    கடைசியாக மல்லி இலை தூவி இறக்கினால் ரவா வேர்க்கடலை கிச்சிடி தயார்.

  10. 10

    தயாரான கிச்சிடியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.

  11. 11

    இப்போது மிகவும் சுவையான சத்தான ரவா வேர்க்கடலை கிச்சிடி சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes