*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)

#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
8பேர்
  1. 11/2 கப்கோதுமை மாவு
  2. 3/4 கப்தோலுரித்த பாதாம்
  3. 11/2கப்சர்க்கரை
  4. 1/2கப்காய்ச்சி ஆறின பால்
  5. 10முந்திரி
  6. 1 டீஸ்பூன்வெண்ணிலா எஸன்ஸ்
  7. 5 டேபிள் ஸ்பூன்உருக்கிய நெய்
  8. 3/4கப்தண்ணீர்
  9. 1 சிட்டிகைஉப்பு (ருசிக்கு)

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    பாதாமை 2 மணி நேரம் ரெசிபி செய்வதற்கு முன் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில்1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை சிவக்க வறுக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.மீதமுள்ள நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுக்கவும்.

  4. 4

    ஊறவைத்த பாதாமை தோலுரித்து மிக்ஸியில்,போடவும்.முதலில் பாதாமை சிறிது அரைக்கவும்.பாலை சிறிது விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.வறுத்த கோதுமை மாவை பௌலில் எடுக்கவும்.கடாயில் சர்க்கரை ழூழ்க தண்ணீர், உப்பு போடவும்.

  6. 6

    சர்க்கரை கரைந்து கொதித்ததும்,(பாகு பதம் தேவையில்லை) 2 டேபிள்ஸ்பூன் நெய் விடவும்.ஒன்றுசேர கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு வறுத்த கோதுமை மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டியில்லாமல் கிளறவும்.

  7. 7

    பின் அடுப்பை சின்னத்தில் வைத்து பற்ற வைத்து, சிறிது பால் விடவும்.அதன் பிறகு பாதாம் விழுதை போடவும். போட்டதும் நன்கு கிளறவும்.

  8. 8

    பிறகு நெய்,விடவும்.அதன்பின் வறுத்த முந்திரியை போடவும்.

  9. 9

    ஒன்று சேர கிளறவும்.சிறிது வெண்ணிலா எஸன்ஸ் விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.ஒரு டிரேயில் நெய் தடவிக் கொள்ளவும்.

  10. 10

    அதில் கலவையை போடவும்.இப்போது சுடசுட,* ஆட்டா வித் பாதாம் ஹல்வா* தயார்.சுவையானது, ஆரோக்கியமானது, சுலபமானது.இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபியை செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes