சுழியம் (suzhiyam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி 2மணி நேரம் ஊறவைத்து, பின்பு குக்கரில் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கி, வடிகட்டவும்.
நன்றாக மசிந்து வெந்திருக்கும.இன்னும்சிறிதளவு மசித்து விட்டுக்கொள்ளலாம்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தட்டி சேர்த்து 1/4டம்ளர்(போதுமானது) தண்ணீர் விட்டு கரைத்து,மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
- 3
வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பகுபதம் தேவையில்லை. பாகு கெட்டியானால் போதும்.
- 4
கெட்டியானதும்,அதில் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து கிளறி பின்,கடலை பருப்பு சேர்த்து கிளறவும்.
- 5
கடலை பருப்பு நன்றாக மசிந்து கெட்டியாக வரும் வரை சிறு தீயில் வைத்து கிளறவும். ஆங்காங்கே, முழு பருப்பும்,சில இருக்க வேண்டும்.
- 6
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.இப்பொழுது,கலவை இன்னும் கெட்டியாக மாறி இருக்கும்.
ஒருவேளை,கலவை கெட்டியாக இல்லாமல்,கொஞ்சம் இளக்கமாக இருந்தால்,20 நிமிடங்கள் பிரிட்ஜ்-ல் வைத்து எடுக்கவும்.
- 7
20 நிமிடம் கழித்து,கெட்டியான கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்.
- 8
மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விட சிறிதளவு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
தண்ணீராக இருந்தால், பொரிக்கும் போது,வெளிப்பக்கம் மொறு மொறுப்பாக வராது.
- 9
பின்பு,ஒவ்வொரு உருண்டைகளாக இந்த மாவு கலவையில் இரண்டு முறை நன்றாக முக்கி எடுத்து, எண்ணெய் காய்ந்ததும்,சிறுதீயில் இல்லாமல்,மீடியும் தீயில் வைத்து பொரித்து எடுக்கலாம்.
- 10
அவ்வளவுதான். வெளியே மொறுமொறுப்பும், உள்ளே சாப்ட்டும்,சுவையுமான சுழியம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)
# goldenapron 3#week16#nutrient 2#book Narmatha Suresh
More Recipes
கமெண்ட் (4)