குடல் மிளகு வறுவல்(kudal milagu varuval recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

குடல் மிளகு வறுவல்(kudal milagu varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4பேர்
  1. 1/2கி ஆட்டு குடல்
  2. 25சின்ன வெங்காயம், நறுக்கியது
  3. 1சிறிய தக்காளி
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 4ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  7. 1/2டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  8. 1டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் (காரத்திற்கேற்ப)
  9. தேவையானஅளவு உப்பு
  10. தாளிக்க:
  11. 3டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  12. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  13. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    ஆட்டுக்குடல்,பெரும்பாலும் வெட்டி சுத்தம் செய்து தருவார்கள்.இருப்பினும்,இருமுறை சுடு நீரில் நன்றாக கழுவி,பின் குளிர் நீரில் கழுவி,கடைசியாக மஞ்சள் உப்பு சேர்த்து கழுவிக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் சுத்தம் செய்த குடல் சேர்த்து,மஞ்சள் தூள் மிளகாய் தூள்,2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறுதீயில் 8 விசில் விடவும்.

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து,சூடானதும் எண்ணெய் விட்டு,பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  4. 4

    வதங்கியதும்,தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி,பின் வேக வைத்த குடல் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    இதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை மீடியம் தீயில் வைத்து வேக விடவும்.

  6. 6

    தண்ணீர் வற்றியதும்,கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  7. 7

    நன்றாக மசாலா ஒட்டிபிடிக்கும் வரை அடிக்கடி கிளறி மூடி போட்டு வேக விடவும்.கடைசியாக கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

  8. 8

    அவ்வளவுதான்.சுவையான குடல் மிளகு வறுவல் ரெடி.இது சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes