மிளகு பொங்கல்(pongal recipe in tamil)

வெண்பொங்கல் மிகவும் பிடித்தமான காலை டிபன் எனக்கு. வெண் பொங்கலில முழு மிளகு போட்டு செய்யலாம் ஆனால் குழந்தைகள் மிளகு பிடிக்காதவர்கள் அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள்.நவீன மழைக்காலத்திற்கு கபம் சேராமல் இருக்க உதவும். மேலும் சீராக்கும் விலகும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் என் பெயர் எனக்காக மிளகை நன்கு பவுடராக்கி பொங்கலில் சேர்த்து விட்டேன். மிளகு வென்பொங்கல் ஹோட்டல் ஸ்டைலில் தயார். தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி அதுவும் தயார்.
மிளகு பொங்கல்(pongal recipe in tamil)
வெண்பொங்கல் மிகவும் பிடித்தமான காலை டிபன் எனக்கு. வெண் பொங்கலில முழு மிளகு போட்டு செய்யலாம் ஆனால் குழந்தைகள் மிளகு பிடிக்காதவர்கள் அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள்.நவீன மழைக்காலத்திற்கு கபம் சேராமல் இருக்க உதவும். மேலும் சீராக்கும் விலகும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் என் பெயர் எனக்காக மிளகை நன்கு பவுடராக்கி பொங்கலில் சேர்த்து விட்டேன். மிளகு வென்பொங்கல் ஹோட்டல் ஸ்டைலில் தயார். தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி அதுவும் தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். நான் சக்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கலுக்கு பெரும்பாலும் நல்ல பச்சை அரிசி நொய் வாங்கிக் கொள்வேன். சீக்கிரமும் குழையும்,சுவை நன்றாக இருக்கும், அதே சமயத்தில் முழு பச்சை அரிசியை விட இந்த அரிசி விலை குறைவு.ஒரு கப் பச்சரிசி குருணை, அரை கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகு சீரகம் இரண்டையும் நீக்கிக் கொள்ளவும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- 2
அரைமணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் வடித்து விட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு அரிசி பருப்பு கலவையை சூடு ஏற வறுத்துக் கொள்ளவும். இதில் 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து (1: 6) கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். குக்கர் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இந்த பாத்திரத்தை அதில் வைக்கவும் குறைந்தது 10 சவுண்டு கூட வேக விடலாம். குழையவேகவேண்டும்.
- 3
இதற்கிடையில் ஒரு வாணலியில் கொஞ்சம் நெய் சேர்த்து பவுடர் ஆக்கிய மிளகு மற்றும் சீரகத் தூள் துருவிய இஞ்சி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் முந்திரிப்பருப்பு கடைசியாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேக வைத்த சாதத்தை கரண்டி கொண்டு ஒருமுறை நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த மிளகுத்தூள் வகையறாக்களை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
படத்தில் காட்டியுள்ளபடி நன்கு கலந்து பிறகு மீதமுள்ள நெய்யை ஊற்றி ஒருமுறை கலந்து விடவும். ஹாட் பாக்ஸில் வைத்து மூடிவைக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் ரெடி செய்து சுடச்சுட இந்த மிளகு பொங்கலை பரிமாறவும். இந்த மழை பனி காலத்தில் மிளகு சீரகம் உடலுக்கு நல்லது காலையில் டிபன் செய்வதற்கு இந்த மிளகு பொங்கல் சேர்த்து செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#ed3வெண் பொங்கல் எல்லாருக்கும் பிடித்தமான காலை டிஃபன். பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ,விடுமுறை தினம் என்றால் பொங்கல், பூரி இவைபோன்ற காலை டிபன் வகைகள் தான் செய்வது வழக்கம் நான் பொங்கல் கெட்டியாக ஆகிவிட்டால் அதை சரி செய்வதற்கு கொஞ்சம் பால் சேர்த்து கிளறி விடலாம் என்பதற்காக இந்த ரெசிப்பி அனுப்பியுள்ளேன். மேலும் இந்தப் பொங்கலை பச்சை நொய்யரிசி வாங்கி அதில் செய்தேன். பச்சை நொய்யரிசி விலை மிகவும் குறைவானது சாதாரணமாக வாங்கும் சாப்பாட்டு பச்சரிசியை விட விலை குறைவு. மேலும் இது வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ,உசிலி, ஆப்பம் , தயிர் சாதம் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடையில் பச்சை நொய்யரிசி, புழுங்கல் நொய்யரிசி என்று கேட்டால் தருவார்கள் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் யூஸ் ஆகும். Meena Ramesh -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரேஷன் பச்சரிசியில் வெண் பொங்கல்(ration rice pongal recipe in tamil)
இந்த வழிமுறையில் செய்தால் ரேஷன் பச்சரிசியில் கூட சுவையான வெண்பொங்கல் வீட்டிலேயே செய்யலாம்.#CF3 Rithu Home -
மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast Azhagammai Ramanathan -
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
-
-
-
-
-
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
-
-
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani
More Recipes
கமெண்ட் (2)