கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)

#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம்.
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம்.
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய நெல்லிக்காய் ஒன்று முழுதாக எடுத்துக் கொள்ளவும். கழுவிட்டு கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அரைக் கேரட்டை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.அரை வெள்ளரிக்காய் கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் சேர்த தாளித்துக் கொள்ளவும். முதலில் நெல்லிக்காய் சேர்த்து 20 செகண்ட் வதக்கவும். பிறகு கேரட் சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்கு வதங்கிய பிறகு வெள்ளரிக்காயை 10 செகண்ட் வதக்கவும்.
- 2
பிறகு வேக வைத்த சாதத்தை உதிரி ஆக்கி தூள் உப்பு சேர்த்து இந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
- 3
சுவையான நெல்லிக்காய் வெள்ளரி கேரட் கலவை சாதம் தயார்.டிப்ஸ்: பொதுவாக கண்பார்வைக்கு சிவப்பு நிறம் பச்சை நிறம் மஞ்சள் நிறத்திலிருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்லது. அதனால் வெள்ளரிக்காய் கேரட் நெல்லிக்காய் குடைமிளகாய் போன்றவை கண்பார்வைக்கு அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வேகவைத்த நிலக்கடலை பாதாம் பருப்பு கீரை வகைகள் வாழைக்காய் செவ்வாழைப்பழம் பொன்னாங்கண்ணிக் கீரை, வால்நட் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். கண்பார்வை தெளிவாக தெரியும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
-
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
#Breakfast இந்த அடை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Food chemistry!!! -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #bookநெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். Meena Ramesh -
-
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
-
சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)
#birthday3பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
-
-
நெல்லிக்காய் சாதம்
பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முயற்சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது Ananthi @ Crazy Cookie -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)