அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CF6
அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 2 கப்வெள்ளை கெட்டி அவல்
  2. 1 கப்அவல் பொரி
  3. 1/4 கப்வேர்க்கடலை
  4. 1/4 கப்பொட்டுக்கடலை
  5. 2 டேபிள் ஸ்பூன்முந்திரி
  6. 1 டீ ஸ்பூன்கடுகு
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  9. ருசிக்குஉப்பு
  10. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  11. 1 ஆர்க்குகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் தே.எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.

  2. 2

    கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும்,அடுப்பை சிறியதாக்கி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.பிறகு நன்கு கலக்கவும்.

  3. 3

    பிறகு அதனை பெரிய பாத்திரத்தில் போடவும்.அடுத்து அவல் பொரியை நன்கு வறுக்கவும்.

  4. 4

    வறுத்ததை பாத்திரத்தில் போடவும்.வேர்க்கடலையை போட்டு வறுக்கவும்.

  5. 5

    வறுத்ததை போடவும்.பிறகு பொட்டுக்கடலை யை வறுக்கவும்.

  6. 6

    அதையும் போடவும்.பின் முந்திரியை போட்டு வறுக்கவும்.

  7. 7

    வறுத்ததை சேர்க்கவும்.பின் கடாயில் தே.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் விட்டு அடுப்பை சிறிய தாக்கி, எண்ணெய் காய்ந்ததும், ம.தூள், காஷ்மீரி மி.தூள், உப்பு போடவும்.

  8. 8

    பின் பொரிந்ததும்,வறுத்த அனைத்தையும் போட்டு நன்கு கிளறவும்.

  9. 9

    கடாயில் 1/2 டேபிள்ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு, நன்கு பொரிந்ததும், மிக்ஸரில் சேர்க்கவும்.

  10. 10

    பின் நன்கு கலந்துக் கொள்ளவும்.இப்போது குளிருக்கு ஆப்ட்டான,* அவல், அவல் பொரி, மசாலா மிக்ஸர்* தயார்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.பின் கன்டெய்னரில் போட்டு வைத்தால் 1 வாரத்திற்கு கவலையில்லை.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes