கருணைக்கிழங்கு மசியல்(karunaikilangu masiyal recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ கருணை கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  4. 1/4 தேக்கரண்டி கடுகு
  5. 1 கொத்து கறிவேப்பிலை
  6. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  7. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 சிறிய தக்காளி
  10. தேவையானஅளவு உப்பு
  11. சிறியகோலி குண்டு அளவு புளி
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. கொஞ்சம்கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருணைக் கிழங்கை குக்கரில் சேர்த்து 3 விசில் வேக விட்டு எடுக்கவும். இதை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். கூடவே மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    மசித்த கருணைக்கிழங்கு இந்த கலவையில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த புளிக் கரைசலில் சேர்த்து கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes