தக்காளி முட்டை சூப்(egg tomato soup recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#CF7

சீனா மற்றும் கொரியா நாடுகளில் மிகப் பிரபலமான சூப் இது.

பொதுவாக சூப் என்றாலே,சாப்பிடும் முன் நம் பசியைத் தூண்டுவதற்காக பருகுவது வழக்கம். ஆனால் இந்த தக்காளி முட்டை சூப்,சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது எளிதாக,ஸ்பைசியாக சாப்பிடக் நினைக்கும் போது இரவு உணவாகக் கூட சாப்பிடலாம்.

அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் குறைந்த கலோரி கொண்டது. முட்டை வாசம் வராது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
3பேர்
  1. 2தக்காளி
  2. 1முட்டை
  3. 750ml தண்ணீர்
  4. 1ஸ்பூன் சோள மாவு
  5. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  7. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம்.

    தக்காளியை சிறு,சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம்.

    முட்டையை அடித்து வைத்துக் கொள்ளலாம்.ரொம்ப அடித்துக் கலக்க தேவையில்லை.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 750ml தண்ணீர் ஊற்றி,அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நறுக்கிய தக்காளி துண்டுகளைச் சேர்த்து 10நிமிடங்கள் வேக விடவும்.

  3. 3

    தக்காளி வெந்ததும்,தக்காளி துன்டுகளை நன்றாக, கரண்டியால் மசித்து விடவும்.

  4. 4

    பின் கரைத்து வைத்த சோளமாவை,மீண்டும் கலக்கி விட்டு கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.

    கொதிக்க ஆரம்பித்ததும்,உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து 3நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  5. 5

    கடைசியாக,ஒரு கையால் முட்டையை ஊற்றி, மறு கையால் கலந்து விடவும்.

    அடுத்தக் நொடியே முட்டை வெந்து,அழகான மாலையாக மிதந்து வரும்.பார்க்க அழகாக இருக்கும்.

  6. 6

    உடனே அடுப்பை அணைத்து, இன்னும் காரம் தேவைப்பட்டால் மிளகு தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    முட்டை வாசம் வராது.

  7. 7

    அவ்வளவுதான்.சுவையான, கலர்புல் ஆன தக்காளி முட்டை சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes