* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CF7
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம்.

* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)

#CF7
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேர்
  1. 2தக்காளி
  2. 1வெங்காயம்
  3. 4 டேபிள் ஸ்பூன்நறுக்கின கோஸ்
  4. 10பூண்டு பல்
  5. 1 டேபிள் ஸ்பூன்சோள மாவு
  6. 2 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்
  7. 2 ஸ்பூன்நெய்
  8. ருசிக்குஉப்பு
  9. 2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை
  10. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தக்காளி, வெங்காயம், கோஸ், ஆகியவற்றை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோலுரித்த முழு பூண்டு, உப்பு போடவும்.

  2. 2

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை சிறியதில் வைத்து வேக விடவும்.பின் அதனை வடிகட்டி, வடிகட்டிய தண்ணீரை தனியாக வைக்கவும்.

  3. 3

    வடிகட்டின காய்கறி கலவையை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.

  4. 4

    வடிகட்டிய தண்ணீரை விட்டு அடுப்பில் வைக்கவும்.சோள மாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறியதாக்கி கொதிக்கும் காய்கறி கலவையில் கரைசலை விடவும்.

  5. 5

    கொதித்து சிறிது கெட்டியானதும்,மிளகை நன்கு பொடித்து அதனை போடவும். பின் நெய் விடவும்.கடைசியாக அடுப்பை நிறுத்தி விட்டு கொத்தமல்லி தழையை போடவும்.

  6. 6

    பரிமாறும் போது சிறிது மிளகு தூள் போடவும்.இப்போது குளிருக்கு மிகவும் ஆப்ட்டான,* வெஜ் சூப்* தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes