நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
5 பரிமாறுவது
  1. ஒரு கிலோநாட்டுக் கோழி
  2. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. 10சின்ன வெங்காயம்
  4. 15வர மிளகாய்
  5. 2 ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. கறிவேப்பிலை
  8. சிறிதளவுமஞ்சள் தூள்
  9. 2 தேக்கரண்டிகடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    சின்ன வெங்காயத்துடன் 5 வரமிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பத்து வரமிளகாயை விதை நீக்கிவிட்டு சேர்க்கவும்

  3. 3

    மிளகாய் சிவந்தவுடன் கருவேப்பிலையை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்து வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

  4. 4

    பின் நாட்டுக்கோழி சேர்த்து மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

  5. 5

    அதன் பின் கொத்தமல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு சிக்கன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.(நான் சிறிது தேங்காய் துண்டுகளை மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொண்டேன் உங்களுக்கு விருப்பமெனில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்)

  6. 6

    சிக்கன் வெந்து தண்ணீர் நன்றாக சுண்டி வரவேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கூட்டிக் கொள்ளலாம். நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes