சப்பாத்தி  மிக்ஸட் வெஜ் மசாலா (Chappathi mixed veg masala recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1காலிஃபிளவர்
  2. 1/4 கப் காரட்
  3. 1/4கப் பச்சை குடைமிளகாய்
  4. 1/4டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/2 டீஸ்பூன் காஸ்மீர் மிளகாய் தூள்
  9. 2தக்காளி (புளிப்பில்லாத)
  10. 1/4 கப் தயிர்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து கலந்து மூடிவைக்கவும்.

  5. 5

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு வேகவிடவும்.

  7. 7

    பின்னர் கால் கப் தயிர் சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடங்கள் கலக்கவும்.

  8. 8

    நன்கு கெட்டியாகி, எண்ணை பிரிந்து கொத்துசு பாதம் வந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் மிக்ஸட் வெஜ் மசாலா தயார்.

  9. 9

    தயாரான வெஜ் மசாலா கறியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

  10. 10

    இந்த மசாலா கறி சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற உணவுகளுடன் சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes