கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.

#sweet recipe

கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.

#sweet recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2கப் கோதுமை மாவு
  2. 2 ஸ்பூன் வெள்ளை ரவை
  3. 1/4ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1/4ஸ்பூன் உப்பு
  5. 2டீஸ்பூன் எண்ணெய்
  6. 1 கப் கடலை பருப்பு
  7. 1கப் வெல்லம்
  8. 3/4கப் தேங்காய்ப்பூ
  9. 3ஏலக்காய் தூள்
  10. தேவையானஅளவு நெய்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு இரண்டு ஸ்பூன் வெள்ளை ரவை இரண்டு ஸ்பூன் எண்ணெய் மஞ்சள்தூள் உப்பு இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்தை விட இலக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.இந்த பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊறவிடவும்..

  2. 2

    போலி செய்ய கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்..கடலைப் பருப்பை மசித்து வைக்கவும்.

  3. 3

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் பூவை நன்றாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய் பூவுடன் காய்ச்சிய வெல்லப்பாகு சேர்த்து. மசித்து வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து ஏலக்காய் போட்டு இறக்கி வைக்கவும்.

  5. 5

    இறக்கி வைத்த போலியை உருண்டையாக செய்து வைத்துக் கொள்ளவும் ஆறியவுடன்..

  6. 6

    30 நிமிடங்கள் ஊறிய கோதுமை மாவை உருண்டையாக எடுத்து தட்டி அதன்நடுவில் ஒரு போலி உருண்டையை வைத்து சப்பாத்தி அளவுக்கு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    சப்பாத்தி மாதிரி தேய்த்து அதை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes