உடைத்த கோதுமை கிச்சிடி சூப் (Broken wheat khichdi soup recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

உடைத்த கோதுமை கிச்சிடி சூப் குளிர் காலத்திலும், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போதும், உடம்பு தேரி வரும் போதும் சாப்பிடலாம். இதில் கோதுமை, பருப்பு,எல்லா காய்கறிகளும் சேர்த்துள்ளதால், இது ஒரு மிகவும் சத்தான, சுவையான சூப்.
#Wt2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1/4கப் உடைத்த கோதுமை
  2. 1/4 கப் பாசி பருப்பு
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1/2 கப் காலிஃபிளவர்
  6. 1/2 கப் பீன்ஸ்
  7. 1/2 கப் கேரட்
  8. 1/2 கப் முட்டைகோஸ்
  9. 1/2 கப் தண்டுக்கீரை (உங்கள் விருப்பம்)
  10. 1பச்சை மிளகாய்
  11. 1டீஸ்பூன் சீரகம்
  12. 1/2 டீஸ்பூன் மிளகு
  13. பாதி எலுமிச்சம் பழச்சாறு
  14. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  15. தேவையான அளவுஉப்பு
  16. 1டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உடைத்து கோதுமை, பாசிப் பருப்பு, மிளகு சீரகம் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி, காய்கறி, கீரை எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    கோதுமை, வறுத்த பருப்பை தண்ணீரில் சேர்த்து நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    பின்னர் குக்கரில் சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள எல்லா காய்கறி, வெங்காயம், தக்காளி, கீரை சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் நெய், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    அரை எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.

  7. 7

    நான் தக்காளி இப்போது தான் சேர்த்துள்ளேன்.

  8. 8

    எல்லாம் சேர்த்து நன்கு கலந்து உப்பு சரிபார்த்து மூடி ஐந்து விசில் விட்டு இறக்கினால் கிச்சிடி சூப் தயார்.

  9. 9

    குக்கர் சூடு தணிந்தவுடன் திறந்து நெயில், சீரகம் தாளித்து கிச்சடி சூப்பில் சேர்த்து கலந்து விடவும்.

  10. 10

    தயார் செய்த கிச்சிடி சூப்பை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, மேலே கொஞ்சம் மிளகுத்தூள் தூவி, சீராக தாளிப்பை சேர்க்கவும்.

  11. 11

    இப்போது மிக மிக சத்தான, சுவையான கோதுமை கிச்சிடி சூப் சுவைக்கத்தயார்.

  12. 12

    எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து, தேவைப்பட்டால் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சுவைக்கவும்.

  13. 13

    கோதுமை, பருப்பு, எல்லா காய்கறிகள், கீரை நெய், மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் அருமையான சுவை இந்த கிச்சிடி சூப்.

  14. 14

    உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது இந்த கோதுமை கிச்சிடி சூப் ஒரு எனர்ஜி பூஸ்டர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes