வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendakkai pulikulambu recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendakkai pulikulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minutes
4 பரிமாறுவது
  1. அரை கிலோவெண்டைக்காய்
  2. ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம்
  3. பத்து பல்பூண்டு
  4. 3தக்காளி-
  5. 3வர மிளகாய்
  6. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  7. ஒரு ஸ்பூன்சாம்பார் பொடி
  8. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுபுளி
  11. தேவையான அளவுஉப்பு
  12. சிறிதுவெல்லம்

சமையல் குறிப்புகள்

30minutes
  1. 1

    வெண்டைக்காயை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு துணியால் துடைத்து ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே எண்ணெயில் வெங்காயம் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் வெண்டைக்காயை சேர்த்துக்கொள்ளவும் சிறிது நேரம் வதக்கி பின்பு 3 தக்காளியை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும். சாம்பார் பொடி வீட்டில் இல்லாதவர்கள் குழம்பு மிளகாய் தூளையும் உபயோகித்துக் கொள்ளலாம்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்பு எடுத்து வைத்துள்ள புளியை நன்கு கரைத்து சேர்த்துக் கொள்ளவும் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

  6. 6

    நன்றாக கொதித்து புளிக்கரைசல் சுண்டி வரவேண்டும் மிதமான தீயில் வைத்து செய்யவும் அப்போதுதான் நன்கு ருசியாக இருக்கும். வெல்லம் சிறிது சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes