வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

#GA4

வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும்.

வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)

#GA4

வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் சுண்டவத்தல்
  2. 50 கிராம் பூண்டு
  3. 15 கிராம் வெந்தயம்
  4. 50 கிராம் வெங்காயம்
  5. 50 கிராம் புளி
  6. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. சிறிதளவுவெல்லம்
  9. கடுகு
  10. கறிவேப்பிலை
  11. பெருங்காயம்
  12. கடலை பருப்பு
  13. 250 கிராம் நல்லெண்ணெய்
  14. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூண்டு வெங்காயம் கருவேப்பிலை மூன்றையும் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளலாம்

  2. 2

    வெந்தயம் கடலைப்பருப்பு சீரகம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்

  3. 3

    அதில் கடுகு, கறிவேப்பிலை, சுண்டவத்தல், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு கரைத்து வைத்த புளியை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

  4. 4

    பச்சை வாசனை போனவுடன் அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும் நன்கு சேர்ந்து வந்தவுடன் அதில் வறுத்து வைத்த பொடியை சேர்க்கவேண்டும் இப்பொழுது நன்றாக இருக்கும் அதில் கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்கு கிளறினால் வத்த குழம்பு தயார். நீங்களும் சமைத்து சுவைத்து பாருங்கள்.

  5. 5

    குறிப்பு: இந்த குழம்பு ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes