லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 கப் வேகவைத்த சாதம்
  2. 2 எலுமிச்சை பழம்
  3. 5 ஸ்பூன் கடலை பருப்பு
  4. 3 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 2 ஸ்பூன் கடுகு
  6. 2 வரமிளகாய்
  7. 25 மில்லி எண்ணெய்
  8. தேவையான அளவுகல் உப்பு
  9. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  10. 25 கிராம் வேர்க்கடலை
  11. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. பொடி செய்வதற்கு
  13. 3 ஸ்பூன் வெந்தயம்
  14. 2 வரமிளகாய்
  15. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  16. 1/2 ஸ்பூன் விதை மல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் வரமிளகாய், கடலை பருப்பு, விதை மல்லி, வெந்தயம் சேர்த்து வறுத்த அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    பிறகு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து எடுத்து கொல்லவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், வேர்கடலை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பிறகு அதில் பிழிந்த எலுமிச்சை பழச்சாறை அதில் சேர்த்து கொல்லவும்

  5. 5

    பிறகு அதில் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    பிறகு அதில் அரைத்த வெந்தயம் பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

  7. 7

    பிறகு ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சாதத்தில் எலுமிச்சை பழச்சாறு ஊற்றி கிளறவும்

  8. 8

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான லெமன் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes