ராகி தோசை(ragi dosai recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

ராகி தோசை(ragi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் ராகி மாவு
  2. மூன்று டேபிள் ஸ்பூன் வறுத்த ரவை
  3. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. ஒரு கொத்து கறிவேப்பிலை
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. இரண்டு ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். 15 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.

  2. 2

    அதன் பிறகு கரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கெட்டியாகும். தோசை மாவு ஊற்றும்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    அடுப்பைப் பற்றவைத்து தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து சுற்றி தோசை ஊற்றவும்.

  4. 4

    ஊத்திய பின்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு தோசை நன்றாக சுட்டு எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான மொறுமொறு தோசை தயார் சூடாக சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes