*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. 1வெள்ளரிக்காய் (பெரியது)
  2. 3தக்காளி (சிறியது)
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1எலுமிச்சம் பழம்
  5. ருசிக்குபொடி உப்பு
  6. 2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கினது)
  7. 2 ஸ்பூன்மிளகு, சீரகத் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில், வெங்காயம்,வெள்ளரிக்காய், தக்காளி, போன்றவற்றை பொடியாக நறுக்கி போட்டு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கலந்து,மிளகு, சீரகத் தூள், சேர்க்கவும்.

  4. 4

    பின், கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    அனைத்தையும் ஒன்று சேர கிளறி பௌலில் மாற்றவும்.இப்போது கோடைக்கு ஏற்ற, *வெஜ் சாலட்* தயார்.செய்து பார்த்து கோடையை தணிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes