முட்டை சேமியா(egg semiya recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

முட்டை சேமியா(egg semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 400 கிராம் வறுத்த சேமியா
  2. 1/4 கப் எண்ணெய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 10புதினா இலைகள்
  8. கொஞ்சம்கொத்துமல்லி இலை
  9. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1/2 தேக்கரண்டி மல்லி தூள்
  12. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 1/2 எலுமிச்சை
  15. 4 முட்டை
  16. 800 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கொரகொரப்பாக அரைத்த தக்காளி விழுதை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு தண்ணீர் மற்றும் மல்லி புதினா இலைகளை சேர்த்து கொதி வந்ததும் சேமியா சேர்க்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறு தீயில் கிளறி விட்டு முட்டையை மேலாக உடைத்து ஊற்றவும். இது மூடி போட்டு சிறு தீயில் தம் வைக்கவும்.

  4. 4

    5 நிமிடம் கழித்து முட்டை வெள்ளைக்கரு வெந்து வரும். பிறகு இவற்றை மெதுவாக கொஞ்சம் சேமியாவை கிளறி மூடி விட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes