மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)

பிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை அளந்து சுத்தம் செய்து அலசி 40 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் அலங்கரிக்க கொடுத்துள்ள முந்திரி ஐ பொரித்து எடுக்கவும்
- 2
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 3
மட்டனை கழுவி சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் பின் இதை அளந்து 1 கப் அரிசிக்கு 1_1/2 கப் தண்ணீர் வீதம் மட்டன் வேகவைத்த தண்ணீர் உடன் மேலும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
- 4
கொதித்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடிகட்டி சேர்த்து வேகவிடவும் அடிக்கடி கிளற கூடாது சாதம் 70 சதவீதம் வரை மட்டுமே வேகவிடவும் பின் தாம்பாளத்தில் பரப்பி மேல் பரவலாக தேங்காய் எண்ணெய் விட்டு ஆறவிடவும் பின் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு அன்னாச்சி பூ ஜாதிபத்ரி சேர்த்து வெடித்ததும் சோம்பு சேர்த்து பொரிய விடவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 6
பின் மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின் வேகவைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்
- 7
ஏற்கனவே வேகவைத்திருப்பதால் 1/2 டம்ளர் தண்ணீர் மட்டும் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் இப்போது சாதம் மற்றும் கிரேவி ரெடி தம் போடறது எப்படி என்று பார்க்கலாம்
பின் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை ஊற்றி தடவி விடவும் - 8
பின் ரெடியாக உள்ள சாதத்தை பரவலாக போடவும் பின் சிறிது மட்டன் கிரேவியை பரவலாக போடவும் பின் அதன் மேல் மீண்டும் சிறிது சாதத்தை பரவலாக போடவும்
- 9
பின் மீதமுள்ள மட்டன் கிரேவியை பரவலாக போடவும் அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விடவும் பின் அதன் மேல் மீதமுள்ள சாதத்தை பரவலாக போடவும்
- 10
அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விடவும் பின் வறுத்த முந்திரி பருப்பை பரவலாக போடவும்
- 11
பின் பொரித்த வெங்காயத்தை பரவலாக போடவும் பின் அதன் மேல் நெய்யை பரவலாக ஊற்றவும்
- 12
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும் பின் அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி அதன் மேல் கொதிக்கும் நீர் பாத்திரத்தை வைக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 15 நிமிடங்கள் வரை தம் போடவும் இதற்கு பதிலாக நெருப்பு போட முடிந்தால் போடலாம் அது இன்னும் நன்றாக இருக்கும்
- 13
பதினைந்து நிமிடம் கழித்து திறந்து அரிசி உடையாமல் மெதுவாக கிளறி விடவும்
- 14
சாதம் 70 சதவீதம் வரை மட்டுமே வேகவிடவும் மட்டன் கிரேவி அதிக தண்ணீர் சேர்த்து நீர்க்க குழம்பு மாதிரி இருக்க கூடாது தொக்கு மாதிரி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக சுண்ட விட வேண்டும் அதற்காக சுக்கா மாதிரி ட்ரையாகவும் இருக்க கூடாது இந்த பதம் முக்கியமானது
- 15
சுவையான ஆரோக்கியமான மட்டன் லேயர் தம் பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (2)