*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#queen1
வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும்.

*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)

#queen1
வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
8 பேர்
  1. 2 கப்வெண் புழுங்கலரிசி
  2. 1/4 கப்பொடியாக நறுக்கிய மாங்காய்
  3. 1 துண்டுஇஞ்சி
  4. 2ப.மிளகாய்
  5. 1டீ ஸ்பூன்கடுகு
  6. 1 ஸ்பூன்க.பருப்பு
  7. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  8. ருசிக்குகல் உப்பு
  9. 1 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  10. 2 கப்புளிக்காத கடைந்த தயிர்
  11. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  12. 5 கப்தண்ணீர்
  13. 1 ஸ்பூன்எண்ணெய்
  14. அலங்கரிக்க:- மாங்காய் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    குக்கரில் அரிசிக்கு தேவையான தண்ணீர்,உப்பு போட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், ப.மிளகாய், இஞ்சியை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு தாளித்த தும், அரைத்த, இஞ்சி, பமிளகாய் விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும், பால், கடைந்த தயிரை விட்டு, அடுப்பை சிறியதில் வைத்து கொதிக்க விடவும்.பின் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போடவும்.

  5. 5

    பிறகு வடித்த சாதம், சிறிது உப்பு, போட்டு கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு நறுக்கின மாங்காய் துண்டுகளை போட்டு ஒன்று சேர கிளறவும்.

  6. 6

    இப்போது, சுடசுட, வெயிலுக்கு ஏற்ற,* மாங்காய் தயிர் சாதம்* தயார்.மேலே நறுக்கின மாங்காயை போடவும். இதற்கு ஊறுகாய் நல்ல காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes