*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
இது எனது புது முயற்சி.சிகப்பரிசியில், புரதச்சத்து அதிகம் உள்ளது.புட்டு, களி, கஞ்சி செய்து சாப்பிடலாம்.சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.உடல் எடையைக் குறைக்கவும்,கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)

#qk
இது எனது புது முயற்சி.சிகப்பரிசியில், புரதச்சத்து அதிகம் உள்ளது.புட்டு, களி, கஞ்சி செய்து சாப்பிடலாம்.சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.உடல் எடையைக் குறைக்கவும்,கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்சிகப்பரிசி
  2. 1 கப்காய்ச்சி ஆறின பால்
  3. 1 கப்புளிக்காத தயிர்
  4. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  5. 1 டீ ஸ்பூன்கடுகு
  6. 1 ஸ்பூன்க.பருப்பு
  7. 2ப.மிளகாய்
  8. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  9. 2 ஸ்பூன்எண்ணெய்
  10. 4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    சிகப்பரிசியை சுத்தம் செய்து,1கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குழைவாக வடித்துக் கொள்ளவும்.

  3. 3

    வடித்த சாதத்தை பௌலில் எடுக்கவும்.அடுப்பை சிறிய தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.

  4. 4

    கடுகு பொரிந்ததும்,க.பருப்பு, ப.மிளகாய், தாளித்ததும், பாலை ஊற்றவும்.

  5. 5

    பால் சற்று கொதித்ததும், வெந்த சிகப்பரிசி, உப்பு, போடவும்.ஒன்று சேர கொதித்து வெந்ததும், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு அடுப்பை, நிறுத்தி விடவும்.

  6. 6

    பிறகு தயிரை விட்டு,5 நிமிடம் சிறு தீயில் வைத்து கிளறவும்.

  7. 7

    பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    இப்போது, சுவையான,சுலபமான, ஆரோக்கியமான, *சிகப்பரிசி தயிர்சாதம்* தயார்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes