பலாக்கொட்டை பருப்பு குழம்பு(jackfruit seed gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#queen1
கேரளாஸ்டைல்-இந்தசீஸனில் பலாக்கொட்டை நன்றாகக்கிடைக்கிறது.பலாக்கொட்டை,முருங்கைகீரை,முருங்கக்காய்,தக்காளி சேர்த்த சத்தான பருப்பு குழம்பு.

பலாக்கொட்டை பருப்பு குழம்பு(jackfruit seed gravy recipe in tamil)

#queen1
கேரளாஸ்டைல்-இந்தசீஸனில் பலாக்கொட்டை நன்றாகக்கிடைக்கிறது.பலாக்கொட்டை,முருங்கைகீரை,முருங்கக்காய்,தக்காளி சேர்த்த சத்தான பருப்பு குழம்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால் மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்துவரம்பருப்பு-
  2. 10பலாக்கொட்டை-
  3. 1முருங்கக்காய்-
  4. அரை கப்முருங்கக்கீரை-
  5. 1தக்காளி -
  6. அரைஸ்பூன்மஞ்சள் பொடி-
  7. 1ஸ்பூன்சாம்பார் மிளகாய் பொடி-
  8. தேவைக்குஉப்பு -
  9. 1பச்சைமிளகாய்-
  10. அரை கப்தேங்காய்துருவல்-
  11. 4சின்னவெங்காயம்-
  12. அரைஸ்பூன்சீரகம்-
  13. அரைஸ்பூன்கடுகு -
  14. அரைஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  15. 1வரமிளகாய்-
  16. 1கொத்துகருவேப்பிலை-
  17. தேவைக்குசமையல் எண்ணெய்-
  18. சிறிதளவுபெருங்காயம்-
  19. சிறிதளவுவெந்தயம்-

சமையல் குறிப்புகள்

முக்கால் மணி நேரம்
  1. 1

    முதலில்பலாக்கொட்டையை சுத்தம் செய்து உறித்து 2 ஆக கட் பண்ணிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து துவரம்பருப்புபோட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி,பலாக்கொட்டையும்சேர்த்து கொதிக்கவிடவும்.

  2. 2

    பின்சாம்பார்பொடி சேர்க்கவும்.தக்காளிசேர்க்கவும்.

  3. 3

    முருங்கக்கீரை,முருங்கக்காய், சேர்க்கவும்.

  4. 4

    பின்பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்இப்போது தேங்காய், வெங்காயம்,சீரகம் அரைத்துசேர்க்கவும்.

  5. 5

    தேங்காய் அரைத்த மிக்ஸிஜாரை லேசாககழுவி அந்ததண்ணீரை விட்டு பின்குக்கரை மூடவும்.2 விசில் வந்ததும் சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் கழித்து குக்கரைத் திறக்கவும்.பின் வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.

  6. 6

    உளுந்து சிவந்ததும் உப்பை அதில் போட்டு குக்கரில் உள்ள பருப்பு குழம்பை அதில்ஊற்றி கொதிக்க விட்டு பின் இறக்கவும்.

  7. 7

    பலாக்கொட்டை பருப்பு குழம்பு ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.சத்தான பலாக்கொட்டை பருப்பு குழம்பு ரெடி.சுவையானது.இந்தசீஸனுக்குத்தான் பலாக்கொட்டை சாப்பிட முடியும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes