* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#queen2
தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது.

* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)

#queen2
தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 5தக்காளி
  2. 6 பல்பூண்டு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 15சின்ன வெங்காயம்
  5. 4 டேபிள் ஸ்பூன்துருவின தேங்காய்
  6. 4ப.மிளகாய்
  7. 2சி.மிளகாய்
  8. 1 ஸ்பூன்உ.பருப்பு
  9. ருசிக்குகல் உப்பு
  10. 1 டீ ஸ்பூன்கடுகு
  11. 1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  12. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை நறுக்கவும்.தேங்காயை துருவித் கொள்ளவும்.அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் தக்காளியை போடவும்.

  2. 2

    பின் மூடி போட்டு மூடி அதன் தோல் ஏரியும் வரை 5 நிமிடம் வேகவிடவும்.

  3. 3

    வெந்ததும் தக்காளியின் தோலை எடுத்து விடவும்.

  4. 4

    கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, ப.மிளகாயை, வதக்கவும்.

  5. 5

    பிறகு தக்காளியை போட்டு நன்கு மசிக்கவும்.துருவினதேங்காய், உப்பை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    நன்கு வதக்கி ஆற விடவும்.

  7. 7

    ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மைய அரைக்கவும்.

  8. 8

    பிறகு பௌலில் மாற்றவும்.கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, மிளகாய் தாளிக்கவும்.

  9. 9

    தாளித்ததை சட்னியில் கொட்டவும்.

  10. 10

    இப்போது, மிகவும் சுவையான, சுலபமான,* தக்காளி கெட்டி சட்னி* தயார்.தோசை, இட்லிக்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes