ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
3நபர்கள்
  1. 2கப் பொரித்த முட்டை கோஸ் பக்கடா
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1பெரிய தக்காளி
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. 1ஸ்பூன் டொமெட்டோ சாஸ்
  8. 1ஸ்பூன் சோயா சாஸ்
  9. 1ஸ்பூன் கார்ன் பிளார்
  10. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்... இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... தக்காளி சேர்த்து வதக்கவும்..

  2. 2

    எல்லாம் நன்றாக சேர்ந்து வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கியதும் அதனுடன் சாஸ், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..

  3. 3

    தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்..

  4. 4

    கார்ன் பிளாரை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றவும்... கெட்டியாக ஆரம்பித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டை கோஸை சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறை சேர்க்கவும்...

  5. 5

    இப்போது சூடான சுவையான ரோடு சைட் காளான் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes