சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும்.

சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)

இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
  1. 1/2கப் மல்லி விதை
  2. 1ஸ்பூன் மிளகு
  3. 1ஸ்பூன் சீரகம்
  4. 1/2ஸ்பூன் கடுகு
  5. 1/2ஸ்பூன் வெந்தயம்
  6. 2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 2டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. 2டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  9. 15-20காஷ்மீரி மிளகாய்
  10. 1கப் கறிவேப்பிலை
  11. 1ஸ்பூன் உப்பு
  12. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெறும் வாணலியில் மல்லி விதை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

  3. 3

    பின்,மிளகு சேர்த்து வறுபட்டதும்,கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து வறுத்து,இவற்றையும் மல்லியுடன் சேர்க்கவும்.

  4. 4

    பின்,துவரம் பருப்பு,கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

  5. 5

    பின் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சூடாகி,புகை வரும்போது எடுத்து விடவும்.

  6. 6

    பின்,நன்கு கழுவிய ஈரப்பதம் இல்லாத கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

  7. 7

    வறுத்த அனைத்தையும் ஆறவிட்டு அதனுடன் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.

    உப்பு சேர்ப்பதால் சாம்பார் பொடி நீண்ட நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும்.

  8. 8

    அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து,சாம்பார் செய்யும் பொழுது 150கி பருப்புக்கு 2-3ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

  9. 9

    அவ்வளவுதான். மணமணக்கும் சாம்பார் பொடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes